Thursday 22 March 2012

மாடு வளர்ப்பு



மாடு வளர்ப்பு

கன்று பராமரிப்பு
கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
பசு மற்றும் எருமைக்கான குடல் புழு நீக்கும் அட்டவணை
கலப்பின கால்நடைக்கான இடத்தேவை
கால்நடை இனங்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் முறைகள்
கோமாரி நோய் / காணை நோய் - அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்
அசோலா - கால்நடை தீவனம்
கன்று பாரமரிப்பு
கறவை மாடுகளுக்கான முதன்மை தடுப்பூசி அட்டவணை

கன்று பராமரிப்பு

பிறந்தவுடன் கன்று பராமரிப்பு
  • கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.
  • கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும். குளிர்காலத்தில் தாய் மாடு கன்றினை நக்கவில்லையெனில் உடனே துணி அல்லது சாக்கினைக் கொண்டு கன்றினை துடைக்கவும். மேலும் செயற்கை சவாசம் அளிக்க, அதன் மார்பில் கையினை வைத்து அமுக்கி அமுக்கி எடுக்கவும்.
  • உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்கி வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ இட வேண்டும்.
  • தொழுவத்தில் ஈரமான கூளத்தினை அடிக்கடி அப்புறப்படுத்தி, எப்பொழுதும் தொழுவத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறந்தவுடன் கன்றின் எடையை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  • மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.
  • கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்
  • கன்று பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து மாட்டிடன் சீம்பால் ஊட்ட முயற்சி செய்யும். சில மெலிந்த கன்றுகள் தானாகவே சீம்பால் ஊட்டவில்லை என்றால் அவை சீம்பால் ஊட்ட உதவி செய்யவேண்டும
கன்றுகளுக்கு தீவனமளித்தல்
பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
கன்றின் முதல் 3-4 வார வயதில் சீம்பால் மட்டுமன்றி பாலும் மிக அவசியம். மூன்று –நான்கு வார வயதிற்கு பின்பு கன்று தாவரமாவுச்சத்துக்களை ஜீரணிக்கும் திறன் பெற்று விடும். இதன் பின்னரும் பால் கன்றுக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அதற்கு பதிலாக அளிக்கப்படும் தானியவகை தீவனங்களை விட பாலுக்கான செலவு அதிகமாகும். கன்றுக்கு அளிக்கப்படும் அனைத்து திரவ வகை உணவுகளும் அதன் உடல் வெப்பநிலையில் இருக்குமாறு அல்லது அறை வெப்பநிலையிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கன்றுகளுக்கு தீவனம் அளிக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் தீவனமளிக்க பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும்.
நீர் அவசியம்
கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் கன்று அதிகமான நீரை குடிக்காமல் இருப்பதைத் தடுக்க, தண்ணீரை வெவ்வேறு உபகரணங்களில், வெவ்வேறு இடங்களில் வைக்கவேண்டும்.
கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள்
கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனங்களைப் பொறுத்தது. கீழ்க்காணும் தீவனமளிக்கும் முறைகளை கன்றுகளை வளர்க்க கடைபிடிக்கப்படுகின்றன
  • பால் மட்டும் அளித்து வளர்ப்பது
  • ஆடை நீக்கிய பாலில் வளர்ப்பது
  • பால் தவிர்த்த மற்ற திரவங்களான புதிதாக தயாரித்த மோர்,புதிதாக தயாரித்த பாலடையினை பாலிலிருந்து பிரித்தெடுத்தவுடன் பெறப்படும் திரவம், கஞ்சி ஆகியவற்றில் வளர்ப்பது
  • பாலுக்கு பதிலாக பால் மாற்றுதிரவங்களில் வளர்ப்பது
  • தொடக்க நிலை கன்று தீவனங்களில் வளர்ப்பது
  • செவிலி மாடு கொண்டு வளர்ப்பது.
பாலில் மட்டும் வளர்ப்பது
  • 0-3 மாத வயதுடைய சராசரியாக 50 கிலோ உடல் எடையை உடைய கன்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளாவன
    உலர் பொருள்1.43கிலோ
    மொத்த ஜீரணமாகக்கூடிய கனிம பொருள்1.60கிலோ
    புரதம்315கிராம்
  • பாலில் அதிகமான கொழுப்பு சத்து இருப்பதால் அதிலுள்ள மொத்த சீரணமாகும் பொருட்களான TDN ன் அளவு அதிலுள்ள உலர்ந்த பொருட்களின் அளவை விட அதிகம் உள்ளது. கன்று பிறந்து பதினைந்தாவது நாளில் புற்களை மேய தொடங்கும். இது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அரை கிலோவாக இருந்து பின்னர் மூன்று மாத வயதில் 5 கிலோவாக உயரும்.
  • பசுந்தாள் தீவனத்தை விட, நல்ல தரமான வைக்கோல் (1-2 கிலோ) இந்த வயதில் கன்றிற்கு நல்ல உணவாகும். பதினைந்து நாட்களில் ஒரு நாளைக்கு 0.5 கிலோவில் ஆரம்பித்து பின்னர் மூன்று மாதங்களில் 1.5 கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும்
  • மூன்று வாரங்களுக்கு பிறகு முழு பால் கிடைக்கவில்லை யென்றால், ஆடை நீக்கிய பால் அல்லது மோர் அல்லது வேறு பால் மாற்று பொருளை உணவாக அளிக்கலாம்.
கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை
  • பால் மற்றும் இதர திரவ உணவுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனங்களின் கலவையே அடர்தீவனக்கலவையாகும். இது தானியங்களால் ஆன முக்கியமாக மக்காசோளம் மற்றும் ஓட்ஸ் அதிகம் கொண்ட கலவையாகும்.
  • பார்லி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியங்களையும் இந்த அடர்தீவனக்கலவையில் சேர்த்துக்கொள்ளலாம். மொலாசஸ் எனப்படும் கரும்புச்சர்க்கரையை 10 சதவிகிதம் அளவுக்கு இந்த அடர்தீவனக்கலவையில் சேர்க்கலாம்.
  • ஒரு தரமான கன்று அடர்தீவனத்தில் 80% TDN (மொத்த சீரணிக்கும் பொருட்கள்)- ம் மற்றும் 22% CP (புரதம்) இருக்கும்.
கன்றுக்கான உலர்தீவனம்
  • இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் கலந்து புல் வைக்கோலும் அளிப்பது சிறந்தது.
  • சூரிய ஓளியில் உலர்த்திய பசுமையான வைக்கோலில் வைட்டமின் A, D மற்றும் B-complex அதிகமாக இருக்கும்.
  • ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும்.
  • ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொஞ்சமாகக் கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.
  • பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும்.
  • பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.
செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல்
  • குறைந்த கொழுப்புச்சத்துடைய ஆனால் அதிக பால் கறக்கக்கூடிய மாட்டுடன், 2-4 தாயற்ற கன்றினை முதல் வாரத்திலிருந்து பால் குடிக்கச் செய்யலாம்
  • உலர்ந்த தீவனத்தினை வைக்கோலுடன் சேர்த்து எவ்வெளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவேண்டும். இவ்வாறு தீவனமளிக்கப்பட்ட கன்றுகளை 2-3 மாதத்தில் மாட்டிடமிருந்து பிரித்துவிடலாம்.
கஞ்சியில் கன்றினை வளர்ப்பது
கஞ்சி கன்றுக்கு அளிக்கப்படும் திரவ ஆரம்பகால தீவனமாகும். இது பாலுக்கு பதில் அளிக்கப்படுவதால், 4 வாரங்களில் இருந்து சிறிது சிறிதாக பாலை குறைத்து அதற்கு பதில் கஞ்சியினைக் கொடுக்கவேண்டும். இதற்கு 20 தினங்களுக்கு பிறகு முழுவதுமாக பால் அளிப்பதை நிறுத்திவிடவேண்டும்
கன்றுதீவனத்தில் கன்றினை வளர்ப்பது
இம்முறையில் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் முழு பாலினை அளித்து பின்னர் உலர் தொடக்க தீவன பொருள் மற்றும் தரமான வைக்கோல் மற்றும் தீவனம் தின்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். பின்பு கன்றின் 7-10வது வார வயதில் பால் மறக்க செய்யப்படும்
பால் மாற்று பொருளில் கன்றினை வளர்ப்பது
கன்றுக்கு தேவைப்படும் சத்துகளை கொடுப்பதில் பாலிற்கு சிறந்த மாற்று பொருள் எதுவும் இல்லை. பால் மற்றும் இதர திரவ உணவு தீவனங்கள் தேவையான அளவு கிடைக்கவில்லையென்றால் பால் மாற்று பொருளை உபயோகிக்கலாம். இது பால் கொடுக்கும் அளவு போன்று கொடுக்கப்பட வேண்டும். அதாவது கன்றின் எடையில் 10-12% பால் மாற்றுப்பொருளை உணவாகக் கொடுக்க வேண்டும்
கன்றினை தாயிடமிருந்து பிரித்தல்
  • கன்றினை தாயிடம் இருந்து பிரிப்பது, தீவிர மேலாண்மை பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு மேலாண்மை முறையாகும். இதனால் எல்லா கன்றுகளுக்கும் தேவையான அளவு பால் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் பால் வீணாவதையும், கன்றுகளுக்கு அதிக அளவு பால் கொடுப்பதையும் தடுக்கமுடியும்.
  • பண்ணையில் பின்பற்றப்படும் மேலாண்மை முறையினைப் பொருத்து கன்றுகளை தாயிடமிருந்து பிரிப்பதை அவை பிறந்தவுடனேயோ, மூன்று வாரத்திலோ, 8-12 வாரத்திலோ அல்லது 24 வார வயதிலோ செய்யலாம். பொதுவாக பண்ணையாளர்கள் 12 வாரத்தில் கன்றினை தாயிடமிருந்து பிரிப்பார்கள். பண்ணையில் பயன்படுத்த வளர்க்கப்படும் காளைக் கன்றுகள், 6 மாதம் வரை தாயுடன் இருக்கும்.
  • நன்கு நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை வளர்க்கும்போது அவை பிறந்தவுடனேயே பால் மறக்கச் செய்வது நல்லது.
  • பிறந்தவுடனேயே கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து பால் மாற்றுப் பொருள் மற்றும் தீவனத்தில் கன்றினை வளர்ப்பதால், பால் மனித உபயோகத்திற்கு சேமிக்கப்படும்.
கன்றினை தாயிடமிருந்து பிரித்ததற்குப் பின்
கன்றினைப் பிரித்ததில் இருந்து மூன்று மாதங்களில், சீராக கன்று தொடக்க தீவனத்தை அளிக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். கன்றின் உடல் அளவில் 3% அளவு, ஈரப்பதம் அதிகம் உடைய பதப்படுத்திய புல் பசுந்தீவனங்களை அளிக்கலாம். ஆனால் பசுந்தீவனங்களை அதிகம் கொடுக்கக்கூடாது ஏனெனில் பசுந்தீவனத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்பொழுது கன்றுகள் எடுத்துக்கொள்ளும் மொத்த ஊட்டச்சத்தின் அளவு குறையும்.
கன்றின் வளர்ச்சி
அடிக்கடி கன்றின் எடையை பார்த்து அது குறிப்பிட்ட எடையில் வளர்கிறதா என்று பராமரிக்க வேண்டும்
  • முதல் மூன்று மாதங்கள் கன்றுக்கு உணவு அளிப்பது மிக முக்கியமானதாகும்.
  • இந்த சமயத்தில் சரியாக உணவு அளிக்கவில்லையென்றால், 25-30% கன்றுகள் இறந்து விடும்.
  • சினை மாட்டிற்கு சினைப்பருவத்தின் கடைசி 2-3 மாதங்கள் நல்ல தரமான தீவனம் அளிப்பது அவசியம்.
  • பொதுவாக கன்று பிறந்தவுடன் 20-25 கிலோ எடையிருக்கும்.
  • தகுந்த தீவனமளித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் தவறாமல் செய்தால் சராசரியாக கன்றின் எடை ஒரு மாதத்திற்கு 10-15 கிலோ எடை கூடும்.
போதுமான வீடமைப்பு முக்கியம்
தாயிடமிருந்து பிரித்த கன்றுகளை தனித்தனி தொழுவத்தில் கட்ட வேண்டும். இதனால் ஒன்றை ஒன்று நக்குவது தவிர்க்கப்பட்டு நோய் தொற்று வராமல் இருக்கும். தொழுவம் சுத்தமாகவும், உலர்வாகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். கன்றுகளின் மீது சுத்தமாக காற்று எப்பொதும் படுமாறு தொழுவத்தினை அமைக்கவேண்டும். கன்றுகளுக்கு வசதியாக இருக்கவும், அவற்றின் உடல் உலர்வாக இருக்கவும் கன்றினை கட்டும் இடத்தில் கூளம் இட வேண்டும். கூளமாக வைக்கோல் அல்லது உமி உபயோகிக்கப்படும். வெளிப்புற தொழுவம் பாதி மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் அதிகமான சூரிய வெப்பம் கன்றுகளின் மீது படுவது தவிர்க்கப்படுவதுடன் மழை மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்தும் கன்றுகள் பாதுகாக்கப்படும். கிழக்கு பக்கம் திறப்பு இருக்கும் தொழுவம், காலை வெயிலினால் வெப்பமாக்கப்பட்டு உச்சி வெயிலில் நிழலால் மூடப்பட்டிருக்கும். மழை இந்த திசையில் இருந்து விழாது.
கன்றுகளை நலமாக வைத்திருத்தல்
பிறந்த கன்றுக்கு நோய்வராமல் காப்பது மிக அவசியம். இதனால் கன்றுகளின் இறப்பு தவிர்க்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுக்கு சிகிச்சை அளிப்பதை விட அவற்றினை நலமாக பேணுவதற்கு குறைந்த செலவே ஆகும். முறையாக கன்றுகளை கண்காணித்து சரியான உணவு அளித்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்குவது மிக அவசியம்.

கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுதன்மை இந்திய பால் பண்ணைத்தொழிலில், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும். சினைபிடிக்காத கறவை மாட்டினை பராமரிப்பது பால்பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாகும். பெரும்பாலான நாடுகளில் சினை பிடிக்காத மாடுகளை இறைச்சிக்காக அனுப்பி விடுவார்கள்.
கறவை மாடுகளில், 10 - 30 % பால் கறவை காலத்தினை மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் பாதிக்கிறது. கறவை மாடுகளில் கருவுறும் தன்மையினை அதிகரிக்கவும், கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்கவும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு முறையாக தீவனத்தினை அளித்து நோய்கள் இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
சினைபிடிக்காத்தற்கான காரணங்கள்
கறவை மாடுகள் சினைபிடிக்காததற்கு காரணங்கள் பல உள்ளன. மலட்டுதன்மை அல்லது கருவுறாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய், பிறவிக்கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கும்
சினைப்பருவ சுழற்சி
பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவ சுழற்சியானது 18-21 நாட்களுக்கு ஒரு முறை 18-24 மணி நேரம் இருக்கும். ஆனால் எருமை மாடுகளில் இந்த சுழற்சிக்கான அறிகுறிகள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை காலையிலிருந்து இரவு வரை 4-5 முறை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சினைப்பருவ காலத்தில் இருக்கும் கறவை மாட்டினை சரியாக கண்டறியாமல் இருப்பது மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும். சினைப்பருவ சுழற்சி அல்லது சினை பருவ காலத்தில் இருக்கும் கறவை மாடுகளை கண்டறிதலில் மிகத் திறமை அவசியம். எவர் ஒருவர் தன் கறவை மாடுகளை பற்றிய பதிவேடுகளை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும்.
கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள்
  • கறவை மாடுகள் சினைப்பருவ காலத்தில் இருக்கும் போதே சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்கவேண்டும்.
  • சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து அதற்கு மருநத்துவம் அளிக்க வேண்டும்.
  • மாடுகள் ஆரோக்கியத்தினை பேண 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் செய்யப்படும் குடற்புழு நீக்கத்திற்கான சிறு முதலீடு, பெரும் இலாபத்தை அளிக்கும்.
  • கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் சக்தி, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனமாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு சரிவிகித தீவனத்தினை கொடுப்பதால் அவற்றின் கருவுறும் தன்மை, ஆரோக்கியமான சினை காலம், பாதுகாப்பான கன்று ஈனல், குறைவான தொற்றுநோய்களின் தாக்கம் மற்றும் ஆரோக்கியமான கன்று பெறுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
  • கிடேரி கன்றுகளுக்கு அவற்றின் இளம் வயதிலிருந்தே சரிவிகிதத் தீவனத்தினை அளித்தால் சரியான வயதில் சரியான எடையுடன் (230-250 கிலோ) இனப்பெருக்கத்திறனை அடையும். இதன் மூலம் அவற்றின் கருவுறும் தன்மை அதிகரித்து இனப்பெருக்கத்திற்கும் ஏற்றதாகவும் இருக்கும்
  • சினையாக இருக்கும் போது அதிகமான அளவு பசுந்தாள் தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன் கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி கறவை மாட்டின் கருப்பையிலிருந்து போடாமல் இருப்பதையும் தடுக்கும்.
  • மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கும் போது அந்த காளைகளின் இனப்பெருக்கத்திறன் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின் மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கவேண்டும்.
  • மாடுகளை சுகாதாரமான முறையில் இனவிருத்தி செய்து, சுகாதாரமான இடத்தில் கன்று ஈனச்செய்வதன் மூலம் அவற்றின் கருப்பையில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
  • மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60-90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப்பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .
  • மாடுகள் கருவுற்று இருந்தால், பின்னர் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பசுவுக்கு சினைக்காலம் 280 நாட்கள், எருமை மாட்டிற்கு 300 நாட்கள்.
  • சினைக்காலத்தின் கடைசி கட்டத்தில் தேவையற்ற அயற்சிகள் மற்றும் ஓரிடத்திலிருந்து மாடுகளை மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லுதல் கூடாது.
  • மற்ற மாடுகளிலிருந்து சினையுற்ற மாடுகளை தனியாக பிரித்தது வைத்து நன்றாக தீவனமளித்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
  • கன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன் பால் கறப்பதை நிறுத்தி போதுமான தீவனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சினை மாட்டின் உடல் நலம் பராமரிக்கப்படுவதுடன், சரியான உடல் எடையில் நலமான கன்று ஈனுதல், குறைந்த நோய் தொற்று போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கன்று ஈன்ற பின்பு மாடுகள் விரைவில் சினைப்பருவ சுழற்சியினை அடைவதற்கும் வழிவகுக்கும்.
  • கறவை மாடு கன்று ஈன்று அடுத்த 4 மாதங்களில் அல்லது 120 நாட்களில் மீண்டும் சினைஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்த்தல் போன்ற முறைகளின் மூலம் இனப்பெருக்கத்திற்கு அவற்றை உட்படுத்தலாம். இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலாபகரமான பால்பண்ணைத் தொழிலை நடத்தலாம்.

கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுதன்மை இந்திய பால் பண்ணைத்தொழிலில், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும். சினைபிடிக்காத கறவை மாட்டினை பராமரிப்பது பால்பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாகும். பெரும்பாலான நாடுகளில் சினை பிடிக்காத மாடுகளை இறைச்சிக்காக அனுப்பி விடுவார்கள்.
கறவை மாடுகளில், 10 - 30 % பால் கறவை காலத்தினை மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் பாதிக்கிறது. கறவை மாடுகளில் கருவுறும் தன்மையினை அதிகரிக்கவும், கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்கவும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு முறையாக தீவனத்தினை அளித்து நோய்கள் இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.
சினைபிடிக்காத்தற்கான காரணங்கள்
கறவை மாடுகள் சினைபிடிக்காததற்கு காரணங்கள் பல உள்ளன. மலட்டுதன்மை அல்லது கருவுறாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய், பிறவிக்கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கும்
சினைப்பருவ சுழற்சி
பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவ சுழற்சியானது 18-21 நாட்களுக்கு ஒரு முறை 18-24 மணி நேரம் இருக்கும். ஆனால் எருமை மாடுகளில் இந்த சுழற்சிக்கான அறிகுறிகள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை காலையிலிருந்து இரவு வரை 4-5 முறை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சினைப்பருவ காலத்தில் இருக்கும் கறவை மாட்டினை சரியாக கண்டறியாமல் இருப்பது மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும். சினைப்பருவ சுழற்சி அல்லது சினை பருவ காலத்தில் இருக்கும் கறவை மாடுகளை கண்டறிதலில் மிகத் திறமை அவசியம். எவர் ஒருவர் தன் கறவை மாடுகளை பற்றிய பதிவேடுகளை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும்.
கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள்
  • கறவை மாடுகள் சினைப்பருவ காலத்தில் இருக்கும் போதே சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்கவேண்டும்.
  • சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து அதற்கு மருநத்துவம் அளிக்க வேண்டும்.
  • மாடுகள் ஆரோக்கியத்தினை பேண 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் செய்யப்படும் குடற்புழு நீக்கத்திற்கான சிறு முதலீடு, பெரும் இலாபத்தை அளிக்கும்.
  • கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் சக்தி, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனமாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு சரிவிகித தீவனத்தினை கொடுப்பதால் அவற்றின் கருவுறும் தன்மை, ஆரோக்கியமான சினை காலம், பாதுகாப்பான கன்று ஈனல், குறைவான தொற்றுநோய்களின் தாக்கம் மற்றும் ஆரோக்கியமான கன்று பெறுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.
  • கிடேரி கன்றுகளுக்கு அவற்றின் இளம் வயதிலிருந்தே சரிவிகிதத் தீவனத்தினை அளித்தால் சரியான வயதில் சரியான எடையுடன் (230-250 கிலோ) இனப்பெருக்கத்திறனை அடையும். இதன் மூலம் அவற்றின் கருவுறும் தன்மை அதிகரித்து இனப்பெருக்கத்திற்கும் ஏற்றதாகவும் இருக்கும்
  • சினையாக இருக்கும் போது அதிகமான அளவு பசுந்தாள் தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன் கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி கறவை மாட்டின் கருப்பையிலிருந்து போடாமல் இருப்பதையும் தடுக்கும்.
  • மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கும் போது அந்த காளைகளின் இனப்பெருக்கத்திறன் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின் மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கவேண்டும்.
  • மாடுகளை சுகாதாரமான முறையில் இனவிருத்தி செய்து, சுகாதாரமான இடத்தில் கன்று ஈனச்செய்வதன் மூலம் அவற்றின் கருப்பையில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
  • மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60-90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப்பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .
  • மாடுகள் கருவுற்று இருந்தால், பின்னர் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பசுவுக்கு சினைக்காலம் 280 நாட்கள், எருமை மாட்டிற்கு 300 நாட்கள்.
  • சினைக்காலத்தின் கடைசி கட்டத்தில் தேவையற்ற அயற்சிகள் மற்றும் ஓரிடத்திலிருந்து மாடுகளை மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லுதல் கூடாது.
  • மற்ற மாடுகளிலிருந்து சினையுற்ற மாடுகளை தனியாக பிரித்தது வைத்து நன்றாக தீவனமளித்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.
  • கன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன் பால் கறப்பதை நிறுத்தி போதுமான தீவனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சினை மாட்டின் உடல் நலம் பராமரிக்கப்படுவதுடன், சரியான உடல் எடையில் நலமான கன்று ஈனுதல், குறைந்த நோய் தொற்று போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கன்று ஈன்ற பின்பு மாடுகள் விரைவில் சினைப்பருவ சுழற்சியினை அடைவதற்கும் வழிவகுக்கும்.
  • கறவை மாடு கன்று ஈன்று அடுத்த 4 மாதங்களில் அல்லது 120 நாட்களில் மீண்டும் சினைஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்த்தல் போன்ற முறைகளின் மூலம் இனப்பெருக்கத்திற்கு அவற்றை உட்படுத்தலாம். இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலாபகரமான பால்பண்ணைத் தொழிலை நடத்தலாம்.

கலப்பின கால்நடைக்கான இடத்தேவை

வயது
தீவன இடம் (மீட்டர்)
நிற்கும் இடம் (சதுர மீட்டர்)
திறத்த இடம் (சதுர மீட்டர்)
4-6 மாதம்
0.2-0.3
0.8-1.0
3.0-4.0
6-12 மாதம்
0.3-0.4
1.2-1.6
5.0-6.0
1-2 வயது
0.4-0.5
1.6-1.8
6.0-8.0
பசு
0.8-1.0
1.8-2.0
11.0-12.0
சினை பசு
1.0-1.2
8.5-10.0
15.0-20.0
எரு*
1.0-1.2
9.0-11.0
20.0-22.0


கால்நடை இனங்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் முறைகள்

கறவை இனங்கள்
சாஹிவால்
  • அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - கிராம சூழலில்1350 கிலோ
                           - வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ
  • 32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது
  • கறவை கால இடைவெளி - 15 மாதம்.

கிர்
  • தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ
                                                    வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ
gir.JPG

தார்பர்கர்
  • ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ
                           – வணிக பால் பண்ணை: 2500 கிலோ

கரண் ஃபிரி
ஹோலஸ்டின் பிரிசின் காளையின் விந்தைக் கொண்டு, செயற்கை முறையில் இராஜஸ்தானின் தர்பார்கர் பசுவுக்கு செயற்கை முறையில் விந்தினை செலுத்தி உருவாக்கிய கலப்பின இரகம் கரண்ஃபிரியாகும். தா்பார்க்கர் பசுக்கள் சுமாரான அளவு பால் கறக்கும் பசுக்களாக இருந்தாலும், அவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காலநிலைனய தாங்கும் சிறந்த தன்மை வாய்ந்தவை.
  • இரகத்தின் சிறப்பியல்புகள்
  • பசுவின் உடல்பகுதி, நெற்றி மற்றும் வால்பகுதி கறுப்பு மற்றும் வெள்ளை நிற பற்றுகள் நிறைந்திருக்கும். மடியானது கறுத்தும், காம்புகளில் வெள்ளை நிறமும், தடித்த பால் நரம்புகளும் காணப்படும.
  • இந்த இரகமானது மிக சாந்தமாக காணப்படும். பெண் கன்று, ஆண் கன்றுகளை விட மிக விரைவாக வளர்ச்சியடையும். 32-34 மாத வயதில் கருவுற தொடங்கும்.
  • சினை காலமானது 280 நாட்கள் ஆகும். கன்று ஈன்று 3-4 மாதங்களுக்கள் மீண்டும் கருவுற தயாராகும். ஆனால் ஏனைய வட்டார இரகங்கள் கன்று ஈன்று மீண்டும் கருவுற 5-6 மாதம் ஆகும்.
  • பால் அளவு : கரண் ஃபிரி பசுக்கள் ஒரு வருடத்திற்கு 3000-3400 லிட்டர் பால் வரை கறக்க வல்லவை. நிறுவன பண்ணையில் இந்த பசு இரகத்தின் சராசரி பால் கறக்கும் அளவானது 3700 லிட்டர் ஆகும். பாலின் கொழுப்பு சத்து அளவு 4.2 சதவிகிதம் ஆகும். இதனுடைய கறனவ நாட்கள் 320 நாட்கள் ஆகும்.
  • இந்த இரகத்தினை நிறைய பசுந்தாள் தீவனம் கொண்டும் மற்றும் சரிவிகித செறிவான உணவு கவவைக் கொண்டும் ஊட்டச்சத்து அளித்து வந்தால், ஒரு நாளுக்கு 15-20 லிட்டர் வரை பாலினை அளிக்கும். பாலின் உற்பத்தியானது நாளுக்கு 25-35 லிட்டர் வரை (முக்கிய கறனவ நேரங்களில், அதாவது கன்று ஈந்த 3-4 மாதங்களில்) செல்லும்.
  • அதிக கறவை அளிப்பதனால், இந்த இரகமானது பால் மடி வீக்கம் மற்றும் கனிம பொருள் பற்றாக்குறை போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனை முன்னரே கண்டறிந்தால் எளிதில் குணமாக்கலாம்.
karan-frie breed
கன்றின் விலை
மாட்டின் கறவையின் திறம் பொறுத்து, புதிதாக ஈன்ற கன்றானது பொதுவாக 20,000 - 25,000 ரூபாயில் கிடைக்கும்.
மேலும் தகவலுக்கு
தலைவர்,
கறவை மாடு இணவிருத்தி துறை,
தேசிய பால் ஆராய்ச்சி மையம், கர்ணால், ஹரியானா 132001
போன் 0184-2259092

சிவப்பு சிந்து
  • பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ
                           – வணிக பால் பண்ணை : 1900 கிலோ
கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள்
ஓங்கோல்
  • ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - 1500 கிலோ
  • வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

ஹரியானா
  • கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்திய பிரதேசம்
  • பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ
  • வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

கங்ரெஜ்
  • குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ
                           - வணிக பால் பண்ணை : 3600 கிலோ
  • 36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.
  • கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்
  • காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.
             
டியோனி
  • ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
  • பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள்
அம்ரித்மஹால்
  • கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.
  • உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

ஹல்லிகார்
  • கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

ஹில்லர்
காங்கேயம்
  • தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
  • உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

அயல்நாட்டு கறவை இனங்கள்
ஜெர்சி
  • 26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.
  • கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்
  • பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ
  • ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.
  • ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.
  • இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.
 

Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்
  • இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.
  • பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ
  • பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.
  • டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

எருமை இனங்கள்
முர்ரா
  • ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி - 1560 கிலோ
  • சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது
  • ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.
  • கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்

சுர்த்தி
  • குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.
  • பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ

ஜப்ராபதி:
  • குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது
  • பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ

நாக்பூரி
  • நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)
  • பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ
கறவை இனங்களை தேர்வு செய்வதற்கான பொதுவான வழிமுறை
கறவை மாடுகளின் தேர்வு
கறவை மாடுகள் மற்றும் கன்றுகளை தேர்வு செய்வதென்பது ஒரு கலையாகும். கறவை மாடுகளை தேர்வு செய்ய கீழ்க்கண்ட குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
  • மாட்டு சந்தைகளில் மாடுகளை தேர்வு செய்யும் பொழுது அவற்றின் இன குணாதிசயங்களையும், பால் உற்பத்தி திறனையும் கவனிக்க வேண்டும்.
  • மாடுகளின் வரலாற்றை பிரதிபளிக்கக் கூடிய பராம்பரிய பதிவேட்டை காணவும்.
  • கறவை மாடுகள், அவை ஈனக்கூடிய முதல் 5 பருவத்திலேயே அதிகப்பால் கொடுக்கிறது.  எனவே கறவை மாடுகளை முதல் அல்லது இரண்டாவது முறை ஈனும் பொழுது, ஈன்ற 1 மாதம் கழித்து தேர்வு செய்யவும்.
  • தொடர்சியாக கறந்து, அவற்றின் சராசரியை கொண்டு மாட்டின் பால் உற்பத்தியை கணக்கிடலாம்.
  • யார் வேண்டுமானலும் கறப்பதற்கு ஏற்றாக இருக்க வேண்டும். 
  • அக்டோபர் - நவம்பர் மாதத்தில் மாடுகளை வாங்குவது நல்லது.
  • ஈன்ற 90 நாட்களில் அதிகபட்ச பால் உற்பத்தி கிடைக்கிறது.
அதிகம் பால் தரக்கூடிய இனங்களின் குணாதிசயங்கள்
  • கவர்ச்சியான  தோற்றத்துடன், திடமாகவும், அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, அனைவரையம் கவரும் வகையில் இருக்க வேண்டும்.
  • உடல் அமைப்பு உளி வடிவில் இருக்க வேண்டும்.
  • கூர்மையான கண்கள், மெலிந்த கழுத்து பெற்றிருக்க வேண்டும்.
  • மடி அடிவயிற்றுடன் நன்கு இணைந்து இருக்க வேண்டும்.
  • மடியின் தோலின் இரத்தக் குழாய்கள் நன்றாக இருக்க வேண்டும்.
  • மடியின் நான்கு பகுதிகளும் நன்கு பிரிந்து நல்ல காம்புகளும் இருக்க வேண்டும்.
வணிக ரீதியான பால் பண்ணைக்கான இனங்களின் தேர்வு- ஆலோசனைகள்
  • இந்திய சூழ்நிலையில், ஒரு பால் பண்ணைக்கு குறைந்த அளவு 20 மாடுகள் (10 பசு, 10 எருமை) இருக்க வேண்டும்.  இதனை 100 என்ற எண்ணிக்கைக்கு நீட்டிப்பு செய்யலாம் (50 :  50 அல்லது 40  :  60 என்ற விகிதத்தில்).  எனினும் இதற்கு மேல் அதிகரிக்கும் பொழுது, உங்களது சக்தியையும் விற்பனை திறனையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்.
  • சுகாதார அக்கரையுடைய நடுத்தர மக்களுக்கு, குறைந்த அளவு கொழுப்புடைய  பால் தேவை.  எனவே கலப்பின மாடுகள் மற்றும் எருமைகளை தனி வரிசைகளில் ஒரே கொட்டகையில் வைத்து கலப்பு பண்ணையை வைக்க வேண்டும்.
  • உடனடியாக பால் விற்பனை செய்ய, அதிக தேவை இருக்கும் விற்பனை இடங்களைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.  இரண்டு வகைப் பாலையும் கலந்து தேவைக்கேற்ப விற்பனை செய்யவும்.  ஹோட்டல் மற்றும் சில பொதுவான வாடிக்கையாளர்களுக்கு (30%) எருமைப்பால் தேவைப்படும்.  மருத்துவமனைகள் பசும்பாலை விரும்புகின்றன.
வணிக ரீதியான பண்ணைக்கான மாடு . எருமைகளை தேர்வு செய்யும் முறை
பசுமாடுகள்
  • ஒரு லிட்டர் பாலிற்கு ரூ.1,200 - ரூ.1,500 என்ற விலையில் நல்ல தரமான மாடுகள் சந்தையில் கிடைக்கிறது.  (நாளுக்கு 10 லிட்டர் பால் கொடுக்கக்கூடிய மாட்டின் விலை ரூ.12,000 - 15,000)
  • நன்றாக பராமரிக்கும் பொழுது, ஒவ்வொரு 13-14 மாத இடைவெளியில், கன்று ஈனுகிறது.
  • கறவைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நன்றாக பால் தரக் கூடிய கலப்பினங்கள் (ஹால்ஸ்டீன் மற்றும் ஜெர்சி கலப்பினங்கள்) இந்திய சூழலுக்கு ஏற்றவை ஆகும்.
  • பசும்பாலில் 3-5.5% கொழுப்பு உள்ளது.  இது எருமைப்  பாலைவிட சற்று குறைவாக உள்ளது.
எருமைகள்
  • மாட்டுப் பண்ணைக்கு ஏற்ற முர்ரா மற்றும் மேசனா போன்ற எருமை இனங்கள் உள்ளன.
  • பசும்பாலைவிட எருமைப்பாலில் அதிக அளவில் கொழுப்பு சத்து இருப்பதால், இது வெண்ணை மற்றும் நெய்க்காக அதிகம் தேவைப்படுகிறது.  இந்திய வீடுகளில அதிகம் அருந்தப்படும் டீ தயாரிப்பதற்கும் எருமைப் பால் விரும்பப்படுகிறது.
  • எஞ்சிய பயிர் கழிவுகளைக் கொண்டு எருமையை வளர்க்கலாம்.  இதனால் செலவு குறைகிறது.
  • எருமைகள் ஈனுவதற்கு தாமதமாகிறது.  மேலும் கறவை கால இடைவெளி 16-18 மாதங்கள் ஆகிறது.  காளைக் கன்றுகளுக்கு அதிக மதிப்பு இல்லை.
  • எருமைக்கு குளிர்ச்சியான சூழல் தேவை. 

கோமாரி நோய்

கோமாரி நோய் மாடு, ஆடு, பன்றி முதலிய கால்நடைகளைத் தாக்கி மிக அதிக அளவிலான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் கொடிய தொற்று நோயாகும். நம் நாட்டில் இந்நோய் ஏற்படுவதால் கால்நடை உபபொருட்களை ஏற்றுமதி செய்ய இயலாமல் பெருத்த இழப்பு ஏற்படுகிறது. மேலும் கால்நடை உரிமையாளருக்கு கால்நடைகளின் நிரந்தர பயன்பாடான பால் உற்பத்தி பாதிப்பு போன்றவற்றால் அதிக நட்டத்தினை ஏற்படுத்துகிறது.
கோமாரி நோயின் அறிகுறிகள் என்ன?
  • மிக அதிக காய்ச்சல்
  • சோர்ந்து காணப்படுதல்
  • பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாய், கால் குளம்புகளின் இடைவெளி மற்றும் பால் மடியில் கொப்புளங்கள் தோன்றுதல்
  • பாதிக்கப்பட்ட கால்நடைகள் நாக்கினை நீட்டியபடி வாயில் நுரையுடன் கூடிய எச்சில் ஒழுக்குதல்
  • கால் குளம்புகளில் புண்கள் இருப்பதால் கால் நொண்டி நடத்தல்
  • சமீப காலங்களில் இந்நோயானது பாலூட்டும் இளங்கன்றுகளின் இதயத்தினை தாக்கி அதிக இறப்பினை ஏற்படுத்துகிறது
வாயில் கோமாரி நோயின் அறிகுறிகள்
    
கால் குளம்புகளில் கோமாரி நோயின் அறிகுறிகள்
    

கோமாரி நோய் எவ்வாறு பரவுகிறது?
  • நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்ற கால்நடைகளுக்கு காற்றின் மூலமாக பெரும்பாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக உள்ள நேரங்களில் இந்நோய்க்கிருமி பரவுகிறது
  • இந்நோய் தீவனம், பண்ணையில் பயன்படுத்தப்படும் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றின் மூலமும் பறவைகள், நாய் மற்றும் இதர விலங்குகளின் நடமாட்டத்தின் மூலமும் எளிதாகவும் மிக விரைவாகவும் பரவுகிறது
  • பாதிக்கப்பட்ட கறவை மாடுகள் கன்றுகளுக்கு பாலூட்டும் போது கன்றுகளுக்கு இந்நோய் பரவுகிறது
  • செம்மறியாடுகள் மற்றும் பன்றிகள் இந்நோய்க்கிருமியினை மாடுகளுக்கு பரப்புவதில் அதிக பங்கு வகிக்கின்றன
  • கலப்பின மாட்டினங்கள் (ஜெர்சி, ஃபிரிசியன்) நம்நாட்டு மாடுகளை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன
  • கோமாரி நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்வதின் மூலம் இந்தோய் எளிதில் பரவுகிறது
கோமாரி நோயின் பின்விளைவுகள் என்ன?
  • பாதிக்கப்பட்ட மாடுகளில் மூச்சிரைப்பு ஏற்பட்டு உற்பத்தி திறன் குறைதல்
  • கறவை மாடுகள்  எளிதில் மடி வீக்க நோயினால் பாதிக்கப்படுதல்
  • கறவை மாடுகள் சினை பிடிப்பது கடினமாதல்
  • சினை மாடுகளில் கன்று வீசிவிடுதல்
  • பால் உற்பத்தி குறைந்து மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்துதல்
  • காளை மாடுகளில் இனவிருத்தி திறன் குறைதல்
நோய் சிகிச்சை
  • ஒரு சதவிகித பொட்டாசியம் பர்மாங்கனேட் கொண்டு நோயுற்ற கால்நடைகளின் வாய் மற்றும் கால் புண்களை கழுவவேண்டும்
  • வாய் புண் மீது போரிக் அமிலம் கிளிசரின் களிம்பினையும், கால் புண்களின் மீது ஆன்டிசெப்டிக் களிம்பினை தடவ வேண்டும்
நோய் தடுப்பு முறைகள்
  • நோய் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகளை நோய் தாக்கியுள்ள பகுதிக்கு ஓட்ட செல்லக்கூடாது
  • நோய் தாக்கியுள்ள பகுதிகளிலிருந்து கால்நடைகளை வாங்கக்கூடாது
  • புதிதாக கால்நடைகளை வாங்கும் போது அவற்றினை 21 நாட்களுக்கு மற்ற கால்நடைகளிலிருந்து தனியே கட்டி பராமரிக்க வேண்டும்
தடுப்பூசி போடுதல்
  • ஒரு பகுதியிலுள்ள அனைத்து மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு கோமாரி நோய்க்கு ஒருங்கிணைந்த முறையில் தடுப்பூசி போட வேண்டும்
  • கன்றுகளுக்கு முதலாவது தடுப்பூசி நான்காவது மாத வயதிலும் பின்னர் இரண்டாவது தடுப்பூசி ஐந்தாவது மாத வயதிலும் பிறகு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு மாதத்திற்கொரு முறை பூஸ்டர் தடுப்பூசி தவறாமல் போட வேண்டும்

அசோலா - கால்நடை தீவனம்

அசோலா பற்றி
  • தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.
  • பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.
  • மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
  • பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • வேகமாக வளரும் தன்மை கொண்டவை.

                            அசோலா

அசோலா- தீவனமாக
  • அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.
  • உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.
  • அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.
  • அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
  • செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.
அசோலா உற்பத்தி
  • மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
  • செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.
  • புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்
  • அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
  • சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
  • புதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
  • மேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
  • 500 - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
  • ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
  • தினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.
  • மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.
  • மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
  • 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
  • அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.

நன்றாக வளர்ந்த அசோலா
          
                                            அசோலா உற்பத்திக்கான தொட்டிகள்
அசோலா அறுவடை
  • அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.
  • ஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.
  • அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.
மாற்று இடுபொருட்கள்
  • புதிய சாணத்திற்க்கு பதிலாக சாண எரி வாயு கலனில் இருந்து வெளியேறும் சாணத்தை உபயோகப்படுத்தலாம்.
  • குளியலறை மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அசோலா குழியில் நிரப்ப பயன்படுத்தலாம்.
நல்ல வளர்ச்சிக்கான சுற்று சுழல் காரணிகள்
  • வெப்பநிலை 200C - 280C
  • வெளிச்சம் 50% சூரிய ஒளி
  • ஈரப்பதம் 65 - 80%
  • தொட்டில் நீரில் உயரம் 5-12 செ.மீ
அசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை
  • அசோலாவை  சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
  • தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.
  • நிழல் வலைகளை உபயோகப்படுத்தி வெளிச்சத்தின் அளவை குறைக்கலாம்.
  • அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்கலாம்.

கன்று பாரமரிப்பு

  • " இன்றைய கன்றுகள் நாளைய பசுக்கள் "  கன்றுகள் வளர்ச்சி குன்றினால் பருவமடைவது தாமதமாகி உற்பத்தி திறன் குறைந்து விடுகிறது.
  • கன்று பிறந்தவுடன், தொப்புள் கொடியை சுமார் 8 செ.மீ. விட்டு சுத்தமான கத்தரியால் வெட்டி டிஞ்சர் அயோடின் தடவ வேண்டும்.
  • கன்று பிறந்த 2 மணி நேரத்திற்குள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சீம்பால் கொடுக்க வேண்டும்.
  • கன்றுகளுக்கு தாய்ப்பாலோடு கன்று தீவனத்தையும் சேர்த்து கொடுத்தால் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். கன்று தீவனம் கீழ் கண்டவாறு தயாரிக்காலாம்.
மக்காசோளம்30 பங்கு
பிண்ணாக்கு27 பங்கு
தானியங்கள்20 பங்கு
தவிடு10 பங்கு
உடைத்த அரிசி10 பங்கு
தாதுஉப்புக் கலவை3 பங்கு
  • கன்றுகள் பிறந்த 2- 3 வாரங்களில் பசும்புற்களையும் தீவனக்கலவையையும் தின்னத் தொடங்கும்.
  • கன்றுகளில் ஏற்படும் சிறுநீர் குடித்தல், மண் மற்றும் குப்பைகளை உண்ணும் பழக்கங்களை தடுக்க தொழுவத்தில் உப்புக்கட்டிகளை தொங்கவிட வேண்டும்.
  • கலப்பின மாடுகளில் கொம்புகள் திடமான இல்லாத காரணங்களால், கலப்பின கன்றுகளின் கொம்பு குருத்தை 21 நாட்களில் கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு நீக்க வேண்டும்.
  • கன்று பிறந்த ஒரு வாரத்திலும் பிறகு மூன்றாவது வாரத்திலும் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். பின்னர் இரண்டு மாததிற்கு ஒரு முறை 6 மாத வயது வரை குடற்புழு நீக்க வேண்டும்.
  • கன்றுகளுக்கு 4 முதல் 6 மாத வயதில் கோமாரி நோய், சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் நோயைகளுக்கான தடுப்பூசிகளை போடவேண்டும். கோமாரி நோய் தடுப்பூசியை 6 மாததிற்கு ஒரு முறையும் சப்பை நோய் மற்றும் தொண்டை அடைப்பான் தடுப்பூசிகளை வருடத்திற்கு ஒரு முறையும் திரும்ப திரும்ப போடவேண்டும்.

கறவை மாடுகளுக்கான முதன்மை தடுப்பூசி அட்டவணை

வ.எண்வயதுதடுப்பூசி
1.நான்காம் மாதம்கோமாரி நோய் முதல் தடுப்பூசி
2.இரண்டு முதல் நான்கு வாரங்கள் கழித்துகோமாரி நோய் இரண்டாம் தடுப்பூசி
3.பின்பு வருடம் மூன்று இரு முறை (தொடர்ந்து நோய் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளில் மட்டும்) அல்லது வருடம் இரு முறைகோமாரி நோய் பூஸ்டர் தடுப்பூசி
4.ஆறாம் மாதம்சப்பை நோய்
அடைப்பான் நோய்
5.ஆறாம் மாதத்திற்கு பின்தொண்டை அடைப்பான் நோய்
6.வருடம் ஒரு முறைதொண்டை அடைப்பான், சப்பை மற்றும் அடைப்பான் நோய்

1 comment:

  1. அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete