Friday 23 March 2012

அமலா-விமலா ஜோக்ஸ் 1


அமலா-விமலா ஜோக்ஸ் 1

(அமலா-விமலா சிரிப்புகள்)


அமலா : நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
விமலா : ஜன கண மன விற்குக் கைதட்டினாரே!

அமலா : என்னை அவமானப்படுத்திட்டே, அவமானப்படுவதற்காக நான் இங்கே வரலே.
விமலா : அப்படியா? அவமானப்பட வழக்கமா எங்கே போவாய்?

அமலா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
விமலா : எதை வைத்து?
அமலா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!

அமலா : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
விமலா : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
அமலா : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

அமலா : அவர் கோயிலுக்கு போகும் போது பாய்ந்து பாய்ந்துதான் போவார்..
விமலா : ஏன்?
அமலா : அவர்தான் பக்திமான்-ஆச்சே..

அமலா : உங்க மாமா டெல்லியில் என்னவா இருக்காரு..?
விமலா : அங்கேயும் எங்க மாமாவாதான் இருக்காரு..

அமலா : "என்ன உன் கணவர் தூக்கதுல 'ஹலோ.. ஹலோ..'ன்னு டெலிபோன்ல பேசறது மாதிரி பேசறாரு?"
விமலா : "நான்தான் சொன்னேனே, அவருக்கு தூக்கத்துல 'கால்' போட்ற பழக்கம் இருக்குன்னு."

விமலா : நீ வீட்ல வெப்சைட் வெச்சிருக்கியா..?
அமலா : இல்லடா..
விமலா : பக்கத்து வீட்டுல ஒரு சைட் வெச்சிருக்கேன்.

அமலா : பைனான்ஸ் கம்பெனிக்காரரைக் காதலிச்சது தப்பாய் போச்சு!
விமலா : ஏன்?
அமலா : எங்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினாலும் ஓடிப் போய் தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கிறார்.

அமலா : என்னது உன் கணவரை அந்த பிரபலமான பாகவதர் கச்சேரிக்கு கூப்பிட்டாரா ஆச்சரியமா இருக்கே!
விமலா : இதுல என்ன ஆச்சரியம் அவர் எனக்கு போட்ற ஜால்ராவ பாத்துட்டு அந்த பாகவதர் ஜால்ரா தட்ட கூப்பிட்டிருக்கார்.
====================================================================

அமலா-விமலா ஜோக்ஸ் 2

(அமலா-விமலா சிரிப்புகள்)


டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா : எப்டி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!

அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?
விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.

அமலா : பத்திரிக்க ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு.
விமலா : ஏன் ?
அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்.

அமலா : என் மாமியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
விமலா : எப்படி?
அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டார்.

அமலா : வாசல்ல நின்னுக்கிட்டுதான் என் மாமியார் என்கூட சண்டை போடுவாங்க
விமலா : ஏன்?
அமலா : அப்பதான் ஜெயிக்க முடியும்னு அவுங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்ல சொன்னாங்களாம்.

அமலா : புகுந்த வீட்டுல பெண்கள மதிக்க மாட்டேங்குறாங்க .
விமலா : என்ன செய்றாங்க?
அமலா : மாமியார் மருமக சண்டைக்கு வாய்ப்புக் குடுக்காம எந்நேரமும் அப்பாவும் மகனும் சண்டை போடுறாங்க.

அமலா : "என் புருசனுக்கு ரொம்ப நல்ல மனசு"
விமலா : "எத வச்சு சொல்ற?"
அமலா : "சமையல் செய்றதுமில்லாம எனக்கு ஊட்டியும் விடுவாரே, அத வச்சு தான்."

விமலா : "என் மாமியாரும் நானும் சும்மா இருந்தாலும் என் புருசன் சண்டை போடச் சொல்லி வற்புறுத்துவாரு"
அமலா : "ஏன்?"
விமலா : "வீட்டோட இயல்பு நிலை பாதிச்சிடக் கூடாதுன்னுதான்".
====================================================================

அமலா-விமலா ஜோக்ஸ் 3

(அமலா-விமலா சிரிப்புகள்)


அமலா : சண்டை போட்டுட்டு ரொம்ப நாளா பேசாம இருந்த பக்கத்து வீட்டு கங்காவயும், எதிர்த்து வீட்டு காவேரியயும் என் மருமக சமாதானம் பண்ணி பேச வச்சுட்டா.
விமலா : அதுக்கென்ன?
அமலா : கங்கா - காவேரிய இணச்சுட்டதா பெருமையா பேசிக்கிறா.

அமலா : என் மருமக ரொம்ப சோம்பேறி
விமலா : என்ன செய்றா?
அமலா : திடிர்னு சண்டைய நிறுத்திட்டு சமாதானம் ஆயிடுவா.

அமலா : என் மருமகள்களுக்கிடயே கடுமையான போட்டி.
விமலா : எதுக்கு ?
அமலா : என்கூட யார் முதல்ல சண்டை போடுறதுன்னுதான்.

அமலா : என் காதலர் என்ன ஏமாத்திருவாரோன்னு பயமா இருக்கு.
விமலா : ஏன்?
அமலா : பீச்சுக்கு வரும்போதெல்லாம் அல்வா வாங்கிட்டு வர்றாரு.

விமலா : "ரொம்ப நாளா சரியா சாப்பிடாததால கருவாடு மாதிரி ஆயிட்டா"
அமலா : "யாரு?"
விமலா : "மீனா தான்"

அமலா : என் முகத்துல புள்ளிகளா இருக்கு, அதை அழகு படுத்த ஒரு ஐடியா சொல்லு.
விமலா : அந்தப் புள்ளிகள இணைச்சு கோலமா போட்டுரு அருமையா இருக்கும்.

விமலா : என் மாமியார் பொறாமைப் படுறாங்க
அமலா : எதுக்கு ?
விமலா : என் புருசன் கூட மட்டுமே நான் சண்டை போடுறேனாம் அதுக்குத்தான்.

அமலா : என் புருசன் சரியான சினிமாப் பைத்தியம்
விமலா : அதுக்காக இருக்கிற பாத்திரங்கள கேரக்டர்னு சொல்றது அவ்வளவு நல்லா இல்ல.
==================================================================

அமலா-விமலா ஜோக்ஸ் 4

(அமலா-விமலா சிரிப்புகள்)


அமலா : என் காதலருக்கு குறும்பு ஜாஸ்தி.
விமலா : எப்படி சொல்ற?
அமலா : 'உங்களையே நினைச்சு உருகிக்கிட்டிருக்கேன்'னு சொன்னதுக்கு, எத்தன டிகிரி செல்சியஸ்லனு கேக்குறாரு.

விமலா : இன்னும் தனிக்குடித்தனம் போகாம இருக்கியே ஏன்?
அமலா : என்கூட சண்டைபோட்டு பொழுதுபோக்க மாமியார் வேணும். என் கணவருக்கு சமையல் உதவிக்கு மாமனார் வேணுமில்ல.

அமலா : தானே சமையல் செய்றோம்ங்கிற திமிர் என் புருசனுக்கு இருக்கு.
விமலா : எப்படிச் சொல்ற?
அமலா : ஏதாவது சொன்னா பூரிக்கட்டையால மண்டைய உடைச்சுருவேன்னு மிரட்டுறாரு.

அமலா : என் புருசன் கூட சண்டை போட பயமா இருக்கு.
விமலா : அடிச்சுப் போடுவாரா?
அமலா : இல்ல சமையல்ல உப்ப அதிகமாப் போட்டு பழிவாங்குவாரு.

விமலா : நம்ம தேவிக்கும் அவ புருசனுக்கும் ஞாபக மறதி ஜாஸ்தி.
அமலா : எப்படிச் சொல்ற?
விமலா : அவங்க குழந்தைக்கு பேர் வைக்கக் கூட மறந்து போய்ட்டாங்கன்னா பாத்துக்கோயேன்.

அமலா : என்ன என் காதலர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்.
விமலா : என்ன சொல்லி ஏமாத்தினார்?
அமலா : சமைக்கத் தெரியும்னுதான்.

அமலா : சினிமாவுக்குப் பாட்டேழுதுகிறவரக் காதலிச்சது தப்பாப் போச்சு
விமலா : ஏன்?
அமலா : காதல் பேயே, பிசாசேன்னு வர்ணிக்கிறாரு.

அமலா : எங்க ஆபிஸ் மேனேஜருக்கு குழந்தை மனசு
விமலா : எப்படிச் சொல்ற?
அமலா : என் மடியில படுத்துதான் தூங்குவார்.
=======================================================================

அமலா-விமலா ஜோக்ஸ் 5

(அமலா-விமலா சிரிப்புகள்)



அமலா : என்னோட முறைமாமன் பெரிய ரவுடி.....
விமலா : அப்போ வன்முறைமாமன்னு சொல்லு....!

அமலா : என் புருஷன் விவரந் தெரியாதவரா இருக்கார்....
விமலா : என்ன செஞ்சாரு?
அமலா : வீட்டைக் கூட்டிப் பெருக்குறதுக்கு கால்குலேட்டர் வாங்கி வந்துருக்கார்.

அமலா : லவ் லெட்டரை என் தங்கச்சிகிட்ட குடுத்துவிட்டது தப்பாப்போச்சு.
விமலா : ஏன்?
அமலா : என் காதலரோடு ஊரைவிட்டு ஓடிட்டா.

அமலா : உடல் உறுப்புகளைப் பாதுகாக்குறதுல என் கணவருக்கு நிகர் அவரே தான்.
விமலா : எப்படி?
அமலா : தேஞ்சு போயிரும்னு சொல்லி பல்லே தேய்க்க மாட்டாருன்னா பாத்துக்கோயேன்.

அமலா : என் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமான நாள்ல இருந்து தினமும் என்கூட சண்டை போடுறா.....
விமலா : ஏன் மாப்பிள்ளை பிடிக்கலைன்னா....?
அமலா : அப்படியெல்லாம் இல்ல. மாமியார் கூட சண்டை போடுறதுக்காகப் பயிற்சி எடுக்குறா.

அமலா : தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
விமலா : ஏன்னா அதைத் தான் தோய்க்கிறாங்களே. அதுதான்

அமலா : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
விமலா : தெரியாதே!
அமலா : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!

அமலா : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
விமலா : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.
=======================================================================

அமலா-விமலா ஜோக்ஸ் 6

(அமலா-விமலா சிரிப்புகள்)


விமலா : என் மாமியார்கூட இன்னிக்கு பெரிய சண்டை
அமலா : எதுக்கு?
விமலா : நாளையில இருந்து சண்டையே போடக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் இன்னையில இருந்தே சண்டை போட வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏத்துக்கல. அதுக்குத்தான் பெரிய சண்டை வந்துருக்கு.

அமலா : நேத்து என் வீட்டுக்கு திருட வந்தவன் ரொம்ப நல்லவன்.
விமலா : எத வச்சு சொல்ற?
அமலா : பீரோ சாவிய குடுக்க மாட்டேன்னு சொன்ன என் மாமியார அடி பின்னிட்டானே

அமலா : ஒங்க வீட்டு டி.வில ராத்திரி பத்துமணி நியூஸ் வரும்போது டி.வில படம் ஏன் சின்னதா தெரியுது ?
விமலா : அது செய்திச் சுருக்கம் தானே அதான் அப்படித் தெரியுது

அமலா : நான் என் கல்யாணப் புடவையை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன் .. ..? நீ .. .. ?
விமலா : பாத்திரமா வெச்சிருக்கேன்

அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ?
விமலா : அலிபாபா

அமலா : டாக்டர் சினிமா பார்த்துக் கேட்டுட்டார்னு எப்படிச் சொல்றே ?
விமலா : தர்மாமீட்டரைத் தொப்புளில் வச்சுப் பார்க்கறாரே .. ..

அமலா : உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?
விமலா : யார் சொன்னா?
அமலா : என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

அமலா : என்னடி இது அநியாயம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?
விமலா : சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?
===============================================================

No comments:

Post a Comment